25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


மேற்கு தொடர்ச்சி மலையடிவார வனப்பகுதியில் தொடரும் மான்வேட்டை …
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மேற்கு தொடர்ச்சி மலையடிவார வனப்பகுதியில் தொடரும் மான்வேட்டை …

புலிகள் காப்பக மலைப்பகுதியாக தேவதானத்தில் இருந்து ராஜபாளையம், ஸ்ரீவில்லி புத்துார், வத்திராயிருப்பு, சாப்டூர் வரை நீடிக்கிறது. இந்த மலைப் பகுதியில் புலிகள் கரடி, யானைகள்,சாம்பல் நிற அணில்கள் பல்வேறு வகை வண்ணத்துப்பூச்சிகள் உட்பட ஏராளமான வன உயிரினங்கள் உள்ளது.

புலிகள் காப்பகத்தின் துணை இயக்குனர் தலைமையில் நான்கு வனச்சரகர்கள் மற்றும் வனக்காப்பாளர்கள் வேட்டை தடுப்பு காவலர்கள்  இவற்றைக் காக்கும் பொருட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலையில் 24 மணி நேர ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர்.

சமூக விரோத கும்பல்கள் வனப்பகுதிக்குள் புகுந்து மான் வேட்டையில்தொடர்ந்து , செயல்பட்டு வருகிறது. இதனை வனத்துறையினர்  கண்டறிந்து வழக்குகள் பதிவு செய்தாலும், குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள்கைது செய்யப்பட்டாலும், நீதிமன்ற ஜாமின் பெற்று மீண்டும் வனவிலங்குவேட்டையில் ஈடுபடுகின்றனர். இதனால் இப் பகுதியில் வனவிலங்குகள் வேட்டைஎன்பது தொடர்கிறது.

கூடுதல் வேட்டை தடுப்பு காவலர்கள் நியமித்தும், மலையடி வாரத்தில் போலீஸ் செக் போஸ்ட் அமைத்தும், விவசாயிகள் அல்லாத தனி நபர்கள் இரவு நேரங்களில் மலைப்பகுதிக்கு வருவதை தடுக்கவும், வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News